தங்கத்துக்கு மாற்று... வெள்ளியில் ஆன்டிக் நகைகள்
தங்கம் விலை ரூ. ஒரு லட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதனால் ஏழை மக்கள் தங்க நகை வாங்குவது கனவாகி விட்டது. தங்கம் விலை உச்சத்தை அடைவதால் தங்க நகைக்கு மாற்றாக வெள்ளியில் செய்யப்பட்டு தங்க முலாம் பூசப்பட்ட நகைகள் விற்பனைக்கு வந்துள்ளன. இந்த நகைகள் ஆன்டிக் மாடலிலும் கிடைக்கிறது. இப்போது தங்கத்துக்கு மாற்றாக 9 கேரட் தங்கத்தில் செய்யும் நகைகள் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. குறைந்த விலையில் கிடைக்கும் தங்க நகைகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.
அக் 15, 2025