/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ மக்கள் அதிகமான இடத்துல தான் வேலையே... நிரந்தரமான இடம் கொடுங்க...
மக்கள் அதிகமான இடத்துல தான் வேலையே... நிரந்தரமான இடம் கொடுங்க...
காலணி தயாரிக்கும் தொழில் செய்பவர்கள் 50 ஆண்டுகளுக்கும் மேலாக கோவையில் கடை நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு முதலில் கோவை அரசு ஆஸ்பத்திரி முன்பு கடைகள் இருந்தன. பின்னர் அந்த கடைகள் காந்திபுரம் நஞ்சப்பா சாலைக்கு மாற்றப்பட்டது. தற்போது காந்திபுரம் மத்திய சிறை வளாகத்தில் செம்மொழி பூங்கா அமைக்கப்பட்டு வுருகிறது. இதனால் அங்கு வைத்திருக்கும் கடைகளை காலி செய்து வேறு இடத்துக்கு செல்லுமாறு அதிகாரிகள் சொல்கிறார்கள். ஆனால் காலணி தயாரிக்கும் கடை வைத்திருப்பவர்கள் எங்களுக்கு நிரந்தமான ஒரு இடத்தில் கடை கட்டி கொடுங்கள். இனியும் இங்கும், அங்கும் அலைய வைக்காதீர்கள் என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஆக 11, 2024