உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / சத்குரு கருத்து | habeas corpus closed by supreme court | covai

சத்குரு கருத்து | habeas corpus closed by supreme court | covai

கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற பேராசிரியர் காமராஜ். ஈஷா மையத்தில் யோகா கற்க சென்ற தனது இரண்டு மகள்களை கட்டாயப்படுத்தி துறவிகளாக மாற்றிவிட்டனர் என வழக்கு தொடர்ந்தார். தவிர உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். நேரில் ஆஜரான இரு பெண் துறவிகளும் தங்ளகின் சுய விருப்பத்தின் பேரிலேயே அங்கு தங்கி இருப்பதாக வாக்குமூலம் அளித்தனர். அதைத் தொடர்ந்து ஈஷா மையத்தில் பல மணி நேர போலீஸ் விசாரணை நடைபெற்றது. பின்னர் பெற்றோர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. பெண் துறவிகள் யாருடைய கட்டாயமும் இன்றி அவர்களின் சுய விருப்பத்தினால் துறவறம் பூண்டது உறுதியாகி உள்ளது . இதனால் ஆட்கொணர்வு மனுவை முடித்து வைப்பதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதுகுறித்து சத்குரு தனது எக்ஸ் பக்கத்தில், நாட்டின் மிக உயர்ந்த நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறோம். நீதிமன்றத்தின் கவனம் உண்மையாகவே தேவைப்படும் எண்ணற்ற வழக்குகள் இருக்கும்போது, தவறான நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்ட அற்பமான மனுக்களை விசாரிக்க உச்ச நீதிமன்றம் தனது மதிப்புமிக்க நேரத்தை வீணாக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. ஜனநாயகத்தின் சிறப்புரிமைகளை இன்னும் பொறுப்புடன் பயன்படுத்த நாம் கற்றுக்கொள்ள வேண்டிய நேரம் இது” என பதிவிட்டுள்ளார்.

அக் 19, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை