CBSE பள்ளிகளுக்கு இடையேயான தென் மண்டல ஹாக்கி போட்டி | Hockey Championship | Kovai
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்து கல்லார் பகுதியில் சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளி உள்ளது. இங்கு சிபிஎஸ்சி பள்ளிகளுக்கு இடையிலான தென் மண்டல ஹாக்கி போட்டி இன்று துவங்கியது. போட்டியை பள்ளியின் செயலாளர் கவிதா சன் துவக்கி வைத்தார். இப்போட்டிகள் செப்டம்பர் 26ம் தேதி நிறைவடைகிறது. சி.பி.எஸ்.சி. தெற்கு மண்டலம் ஒன்றில் இடம் பெற்றுள்ள தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி, அந்தமான் நிகோபார் யூனியன் பிரதேசங்களில் இருந்து 56 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர் பிரிவில் 68 அணிகள் மற்றும் மாணவியர் பிரிவில் 35 அணிகள் என மொத்தம் 1854 மாணவ மாணவிகள் பங்கேற்றனர். மாணவர் மற்றும் மாணவியர் என தனித்தனியாக 14, 17 மற்றும் 19 வயதிற்கு உட்பட்டோர் பிரிவுகளில் நாக்அவுட் மற்றும் லீக் சுற்றுகள் முறையில் போட்டிகள் நடக்கிறது. தெற்கு மண்டலம் ஒன்று அளவில் நடைபெறும் இறுதிப் போட்டியில் பங்கேற்கும் இரு அணிகளும், தேசிய அளவில் நடைபெறும் சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்துகொள்ள தகுதி பெறுவர்.