உடுமலை ஆர்.கே.ஆர். கல்வி குழுமம் ஏற்பாடு
உடுமலை ஆர்.கே.ஆர். கல்வி குழுமம் ஏற்பாடு | Inter School Cricket Tournament | R.K.R. School | Udumalpet | Tirupur திருப்பூர் மாவட்டம் உடுமலை ஆர்.கே.ஆர். கல்வி நிறுவனங்களுக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி (INTER SCHOOL CRICKET TOURNAMENT)ஆர்.கே.ஆர். குருவித்யா மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் உடுமலை ஆர் கே ஆர் குருவித்யா மேல்நிலைப்பள்ளி, ஆர் கே ஆர் கிரிக்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆர் கே ஆர் ஞானோதயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர். போட்டிகளை ஆர் கே ஆர் கல்வி குழுமத்தின் தாளாளர் ஆர் கே ராமசாமி துவக்கி வைத்தார். இறுதிப் போட்டி ஆர் கே ஆர் குருவித்யா மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆர் கே ஆர் கிரிக்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகளுக்கு இடையே நடைபெற்றது. இதில் ஆர் கே ஆர் குருவித்யா மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வெற்றிக் கோப்பையைத் தட்டிச்சென்றனர். ஆர் கே ஆர் கிரிக்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இரண்டாம் இடம் பெற்று கோப்பையை வென்றனர். சிறந்த பேட்ஸ்மேனாக ஆர் கே ஆர் கிரிக்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவன் ராஜதேவேஷ், சிறந்த பந்து வீச்சாளராக ஆர் கே ஆர் குருவித்யா மேல்நிலைப்பள்ளி மாணவன் அகில் ஆகியோர் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை ஆர் கே ஆர் கல்வி குழுமத்தின் தலைவர் ஆர் கே ராமசாமி, செயலாளர் ஆர் கே ஆர் கார்த்திக்குமார், ஆர் கே ஆர் கிரிக்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் மாலா, ஆர் கே ஆர் குருவித்யா மேல்நிலைப்பள்ளி முதல்வர் ஐரின் கீதா மற்றும் செல்வகுமார், ஆசிரியர்கள் பாராட்டி சிறப்பு செய்தனர்.