500 டாலர்கள் பரிசுத்தொகை| International chess tournament| covai
500 டாலர்கள் பரிசுத்தொகை| International chess tournament| covai கோவை காந்திபுரம் அலங்கார் ஹோட்டலில் 36வது ஐ.எம்., நார்ம் குளோஸ்ட் சர்க்யூட் (IM norm closed circuit) செஸ் போட்டி நடக்கிறது. நவம்பர் 14ம் தேதி துவங்கிய போட்டியின் இறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது. தமிழ்நாடு மாநில செஸ் சங்கம் சார்பில் போட்டி நடத்தப்படுகிறது. இப்போட்டியில் வெளிநாட்டு வீரர்கள் 5 பேர், தமிழகத்தைச் சேர்ந்த மூவர் உட்பட இந்தியாவில் இருந்து ஐந்து வீரர்கள் என மொத்தம் 10 பேர் கலந்து கொண்டனர் கோவை வீரர் கிரிமன் ஜெகதீசன் 7 புள்ளிகளுடன் சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டிச் சென்றார். பெலாரஸ் வீரர் போடோல் சென்கோ, 6.5 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் , குஜராத் வீரர் விவான் விஷால் 5.5 புள்ளிகளுடன் மூன்றாமிடம் வென்றார் . கோவை வீரர் கிரிமன் ஜெகதீசன் இதேபோல் மூன்று முறை வெற்றி பெரும் பட்சத்தில் சர்வதேச மாஸ்டராக அங்கீகாரம் பெறுவார். போட்டியின் முதல் பரிசு 500 டாலர், இரண்டாவது பரிசு 300 டாலர் மற்றும் மூன்றாவது பரிசு 200 டாலர் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. சக்தி குழும தலைவர் மாணிக்கம் மற்றும் செஸ் கிராண்ட் மாஸ்டர் இனியன் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர் விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டிகளை அனைவரும் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.