கோகோவில் சக்தி கல்லுாரி, கபடியில் இந்துஸ்தான் கல்லுாரி முதலிடம்
கோகோவில் சக்தி கல்லுாரி, கபடியில் இந்துஸ்தான் கல்லுாரி முதலிடம் | Coimbatore | Regional level Kabaddi, Go Go Tournaments இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்களுக்கான மண்டல அளவிலான கோ கோ, கபடி போட்டிகள் பச்சாபாளையம் ராமகிருஷ்ணா தொழில்நுட்ப கல்லுாரியில் இரண்டு நாட்களாக நடைபெற்றது. கபடி போட்டியில் இந்துஸ்தான் இன்ஜினியரிங் கல்லுாரி அணி முதலிடமும், சக்தி இன்ஜினியரிங் கல்லுாரி அணி இரண்டாமிடமும், பில்டர்ஸ் இன்ஜினியரிங் கல்லுாரி அணி மூன்றாமிடமும் பிடித்தன. கோ - கோ போட்டியில் சக்தி இன்ஜினியரிங் கல்லுாரி அணி முதலிடமும், குமரகுரு கல்லுாரி அணி இரண்டாமிடமும், பி.எஸ்.ஜி கல்லுாரி அணி மூன்றாமிடமும் பிடித்தன. வெற்றி பெற்ற அணிகளுக்கு கல்லுாரி முதல்வர் பால்ராஜ், ஐ.டி துறை தலைவர் சுரேஷ்குமார் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். போட்டிக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குனர் வேலுசாமி செய்திருந்தார்.