விபத்து ஏற்படும் மேம்பாலம் நிரந்தர தீர்வு தான் வேணும்...
கோவை மாவட்டம் காரமடையில் ரயில்வே மேம்பாலம் உள்ளது. ஆனால் அந்த பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள சாலை தடுப்பான்களால் அடிக்கடி விபத்துக்கள் நடக்கின்றன. மேலும் மேம்பாலத்தின் கீழ் உள்ள சுரங்கப்பாதையில் மழைக்காலங்களில் மட்டுமல்லாமல் எல்லா நாட்களிலும் தண்ணீர் தேங்கி இருப்பதால் இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் அதில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அந்த வாகனங்கள் மேம்பாலத்தின் மீது செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே காரமடை மேம்பாலத்தில் நிலவும் போக்குவரத்து நெரிசலை போக்க வேண்டும் என்பதை இந்த வீடியோ தொகுப்பு வலியுறுத்துகிறது.
ஜூன் 11, 2025