தினமலர் களஆய்வில் அதிர்ச்சி! விதிகளை மீறும் கல்குவாரிகள் | கண்டுகொள்ளாத கனிமவள அதிகாரிகள்
பொதுவாக கனிமவளத்துறையின் உரிமம் பெற்று பல்வேறு விதிமுறைகளுக்கு உட்பட்டு கல் குவாரிகளை நடத்த வேண்டும். ஆனால் பெரும்பாலான குவாரிகளில் விதிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை. அதன்படி கோவையை அடுத்த கிணத்துக்கடவை சுற்றியுள்ள பகுதிகளில் செயல்படும் கல்குவாரிகளால் விவசாயிகள், கால்நடைகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர். குறிப்பாக கிணத்துக்கிடவை சுற்றியுள்ள பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் சில கல்குவாரிகள் விதிமுறைகளை மீறி செயல்படுவதால் விவசாய நிலங்கள், மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். விதிமுறைகளை மீறி செயல்படும் கல்குவாரிகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.