சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு தண்டனை
கோவை மாநகரில் கடந்த மாதம் 17 வயது சிறுவன் ஒருவன் பெற்றோருக்கு தெரியாமல் காரை வீட்டிலிருந்து எடுத்துள்ளான். அதிகாலையில் அவினாசி சாலையில் சென்ற போது அந்த சிறுவனின் கார் மோதி தொழிலாளி ஒருவர் அந்த இடத்திலேயே இறந்துள்ளார். இது போலீசாருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக மாநகர போலீசார் விசாரணை நடத்தி சில தகவல்களை சேகரித்தனர். இதில் கடந்த 2023ம் ஆண்டில் மட்டும் 25 மைனர் சிறுவர்கள் அதாவது 18 வயதை எட்டாத சிறுவர்கள் லைசென்ஸ் இல்லாமல் வாகனங்கள் ஓட்டி விபத்துக்களை ஏற்படுத்தியுள்ளது தெரிய வந்தது. சிறுவர்கள் விபத்து ஏற்படுத்தினால் அது அவர்களின் எதிர்காலத்தையே பாதிக்கும் என்பதால் கோவை மாநகரில் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் ஓட்டும் சிறுவர்களை கண்காணிக்க உத்தரவிடப்பட்டது. போலீசாரின் சோதனையில் சிக்கிய சிறுவர்களின் பெற்றோரை போலீசார் வரவழைத்து எச்சரித்து அனுப்பினார்கள். சில பெற்றோருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இது பற்றி இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.