மைசூருவில் ஜூன் 18 - 20 வரை தேசிய போட்டி நடக்கிறது | National Olympiat competition | Mysore
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ - மாணவிகளுக்காவ தேசிய யோகா ஒலிம்பியாட் போட்டி மைசூரு மண்டல கல்வியியல் நிறுவனத்தில் வரும் 18ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடக்கிறது. இப்போட்டியில் தமிழக அணி சார்பில் பங்கேற்கும் சிறந்த மாணவ - மாணவியரை தேர்வு செய்து அனுப்பும் வகையில் மாவட்ட தேர்வு போட்டி கோவையில் நடந்தது. போட்டியை கோவை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் குமரேசன் துவக்கி வைத்தார். இதில் ஏற்கனவே 15 வட்டாரங்களில் நடந்த வட்டார போட்டியில் வெற்றி பெற்ற 50க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் பங்கேற்றனர். இத்தேர்வு போட்டி 6 முதல் 8ம் வகுப்பு வரை மாணவ, மாணவிகள் பிரிவு, 9 மற்றும் 10 வகுப்பு வரை மாணவர் பிரிவு என இரு பிரிவாக நடத்தப்பட்டது. ஒவ்வொரு பிரிவிலும் சிறப்பாக செயல்பட்ட தலா இரண்டு மாணவர்கள் மற்றும் இரண்டு மாணவிகள் என மொத்தம் 16 பேர் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் மதுரையில் ஜூன் 14ல் நடக்கும் மாநில அளவிலான தேர்வில் பங்கேற்க தகுதி பெற்றனர்.