உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / ஐகோர்ட் உத்தரவிட்டும் கண்டு கொள்ளாத அதிகாரிகள் | official violating high court orders | palladam

ஐகோர்ட் உத்தரவிட்டும் கண்டு கொள்ளாத அதிகாரிகள் | official violating high court orders | palladam

ஐகோர்ட் உத்தரவிட்டும் கண்டு கொள்ளாத அதிகாரிகள் / official violating high court orders / palladam திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த கே. அய்யம்பாளையம் கிராமத்தில் கரடிவாவிக்கு செல்லும் பொது வழித்தடம் ஆக்கிரமிப்பு காரணமாக பயன்படுத்த இயலவில்லை. இதனால் கிராம மக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் 4 கிலோ மீட்டர் சுற்றி செல்கின்றனர். ஆக்கிரமிப்புக்களை அகற்றக்கோரி விவசாயி அசோக்குமார் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். விசாரணை நடத்திய ஐகோர்ட் ஆக்கிரமிப்புக்களை அகற்ற வருவாய்த்துறைக்கு உத்தரவிட்டது. அங்கு வந்த அதிகாரிகள் ஆக்கிரமிப்புக்களை அகற்றாமல் பெயரளவிற்கு சர்வே கல்லை புதருக்குள் நட்டு விட்டு சென்றனர். பாதை அக்கிரமிப்பை அகற்றக்கோரி கிராம மக்கள் கடந்த 2010ம் ஆண்டு முதல் போராடி வருகின்றனர். ஐகோர்ட் உத்தரவிட்டும் அதிகாரிகள் மதிக்கவில்லை. பொது வழிப்பாதையை மீட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

மார் 13, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை