உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / வினாடிக்கு 4,600 கன அடி நீர் வெளியேற்றம் | Parambikulam Dam is full

வினாடிக்கு 4,600 கன அடி நீர் வெளியேற்றம் | Parambikulam Dam is full

கோவை மாவட்டம் பொள்ளாச்சி டாப்சிலிப் அருகே கேரள வனப்பகுதியில் பரம்பிக்குளம் அணை அமைந்துள்ளது. பரம்பிக்குளம் - ஆழியாறு பாசனம் எனும் பி.ஏ.பி. திட்டத்தின் உயிர் நாடியாக விளங்கும் பரம்பிக்குளம் அணை 72 அடி உயரம் கொண்டது. அணைக்கு நீர் வரத்து அதிகரித்த சூழலில் கடந்த வாரம் புதுப்பிக்கப்பட்ட மதகுகள் வழியாக சோதனை ஓட்டமாக நீர் வெளியேற்றப்பட்டது. தொடர்ந்து அணைக்கு நீர் வரத்து அதிகரித்ததால் முழு கொள்ளளவை எட்டியது. மொத்தம் உள்ள 72 அடியில் 71.78 அடியாக நீர்மட்டம் உயர்ந்தது. அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 4,600 கன அடியாக உள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 3,600 கன அடி நீர் மூன்று மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டது. மேலும் 1,000 கன அடி நீர் கால்வாய் வழியாக காண்டூர் கால்வாயில் செல்கிறது. அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ள நிலையில் பி.ஏ.பி. திட்ட கண்காணிப்பு பொறியாளர் கார்த்திக்கேயன், பரம்பிக்குளம் அணை செயற்பொறியாளர் சிவக்குமார், உதவி செயற்பொறியாளர் ஜெயக்குமார், உதவி பொறியாளர்கள் தியாகராஜன், சங்கீதா கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்,

செப் 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை