உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கடந்த ஆண்டைவிட 60% மலர் ஏற்றுமதி சரிவு | Ossur | Rose flower export

கடந்த ஆண்டைவிட 60% மலர் ஏற்றுமதி சரிவு | Ossur | Rose flower export

ஓசூர் பகுதியில் கொய் மலர்களான தாஜ்மஹால், நோப்ளஸ், கிராண்ட்காலா உள்ளிட்ட 40 வகையான ரோஜா மலர்கள் உற்பத்தியாகின்றன. காதலர் தினம், கிறிஸ்மஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன் மூலம் பல கோடி ரூபாய் லாபத்தை ஓசூர் மலர் விவசாயிகள் ஈட்டுகின்றனர். கென்யா நாட்டில் தரமான ரோஜா மலர்கள் உற்பத்தி செய்யப்படுவதால் சர்வதேச சந்தையில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. நடப்பாண்டு காதலர் தின கொண்டாட்டத்திற்கு 40 லட்சம் ரோஜா மலர்கள் மட்டுமே இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. கடந்த அண்டை விட 60 சதவீதம் ஏற்றுமதி குறைந்துள்ளது. ஒசூர் பகுதியில் தோட்டக்கலை பாதுகாப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

பிப் 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ