தடையில்லாமல் நடக்குது மண் கடத்தல்... அதிகாரிகளுக்கு தகவலே தெரியாதாம்! Thondamuthur | Coimbatore
கோவையை அடுத்த தொண்டாமுத்துார் பகுதிகளில் பிரதான தொழில் விவசாயம். ஆனால் இங்கு கடந்த சில ஆண்டுகளாகவே மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பட்டா நிலங்களிலும், புறம்போக்கு நிலங்களிலும் அனுமதி இல்லாமல் கிராவல் மண் மற்றும் செம்மண் சட்டவிரோதமாக இயந்திரங்கள் வாயிலாக லாரிகளில் கடத்தப்படுகிறது. வருவாய்த்துறை, கனிமவளத்துறை, போலீசார் என அனைத்து துறையினருமே கண்ணை மூடிக்கொண்டு பச்சைக் கொடி காட்டுவதால் நாள் ஒன்றுக்கு 20 முதல் 30 டிப்பர் லாரி வரையிலும் சர்வ சாதாரணமாக மண் கடத்துகின்றனர். இதன் வாயிலாக லட்சக்கணக்கான ரூபாய் கொள்ளை லாபம் அடிக்கின்றனர். இதையெல்லாம் விட கொடுமை என்னவென்றால் ஊரை காக்கும் காவல் தெய்வமாய் இருக்கிற தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தை தாண்டி தான் இத்தனை லாரிகளும் மண் கடத்துகின்றன. தொண்டாமுத்துார் பகுதியில் நடக்கும் மண் கடத்தல் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.