உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / 18 அணிகள் களத்தில் உள்ளனர்| Senior Hockey Tournament|covai

18 அணிகள் களத்தில் உள்ளனர்| Senior Hockey Tournament|covai

18 அணிகள் களத்தில் உள்ளனர்| Senior Hockey Tournament|covai கோவை மாவட்ட ஹாக்கி சங்கம் சார்பில் ஜெயா பிரேம் அகப்பே டிராஃபிக்கான சீனியர் ஹாக்கி லீக் போட்டி நடைபெறுகிறது . பி.எஸ்.ஜி., டெக்., மைதானத்தில் போட்டி நேற்று முன்தினம் துவங்கியது. ஆண்களுக்கான போட்டியில் 18க்கும் மேற்பட்ட அணிகள் களத்தில் உள்ளனர். மாருதி கல்லூரி அணியும், கே.சி.டி., அணியும் மோதினர். இதில், 6-0 என்ற கோல் கணக்கில் மாருதி கல்லூரி அணி வென்றது. தொடர்ந்து, சுகுணா HC அணியினர், 2-0 என்ற கோல் கணக்கில் யு.ஐ.டி. HC அணியை வென்றது. எம்.சி.பி.இ., அணி, 7-0 என்ற கோல் கணக்கில் யு.ஐ.டி., HC அணியையும், பிளேஸ் எச்.சி., அணி, 4-1 என்ற கோல் கணக்கில் சி.எச்.சி., அணியையும் வென்றது. பி.பி.ஜி., அணி, 2-0 என்ற கோல் கணக்கில் கே.ஜி., அணியையும், காருண்யா ஸ்போட்ஸ் கிளப் அணி, 16-0 என்ற கோல்களில் எச்.ஐ.டி. HC அணியையும் வென்றனர். பி.எஸ்.ஜி. HC அணி, 9-0 என்ற கோல் கணக்கில் பிளேஸ் அணியையும், யு.ஐ.டி., அணி, 2-1 என்ற கோல்களில் கே.சி.டி., அணியையும், எம்.சி.பி.இ., அணி, 3-0 என்ற கோல் கணக்கில் சுகுணா அணியையும் வென்றது பி.எஸ்.ஜி., டெக்., அணி டை பிரேக்கர் முறையில், 4-2 என்ற கோல் கணக்கில் போத்தனுார் அணியை வென்றது. காருண்யா அணி, 3-0 என்ற கோல்களில் கே.ஜி. கேஸ் HC., அணியை வென்றது. பி.பி.ஜி., HC, அணி, 5-1 என்ற கோல்களில் எச்.ஐ.டி., HC., அணியை வென்றது. எஸ்.எஸ்.ஐ.இ.டி., HC., அணி, 2-0 என்ற கோல்களில் எச்.ஐ.சி.இ.டி., அணியை வென்றது. தொடர்ந்து போட்டிகள் நடக்கின்றன. விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டிகளை அனைவரும் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.

அக் 26, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி