13 பிரிவுகளில் நடந்த சிலம்பம் போட்டி | Silambam competition | covai
அகில இந்திய சிலம்பம் பெடரேஷன் மற்றும் கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலை சார்பில் தேசிய அளவிலான 21வது ஜூனியர் சிலம்பம் போட்டி கோலாகலமாக துவங்கியது. தொடர்ந்து மூன்று நாட்கள் நடக்கும் போட்டியில் குத்துவரிசை, கம்பு வீச்சு, அலங்கார வீச்சு, வேல் கம்பு வீச்சு, வாள் வீச்சு, சுருள் வாள் வீச்சு, மான் கொம்பு, கம்பு சண்டை, குழு ஆயுத விளையாட்டு என 13 பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்படுகிறது. இப்போட்டியை கோவை போலீஸ் பயிற்சி பள்ளி முதல்வர் செட்ரிக் இமானுவேல் துவக்கி வைத்தார். அகில இந்திய சிலம்பம் பெடரேஷன் பொது செயலாளர் ஐரின் செல்வராஜ், கற்பகம் நிகர்நிலை பல்கலை பதிவாளர் ரவி, உடற்கல்வித் துறை இயக்குனர் சுதாகர் ஆகியோர் பங்கேற்றனர். பல்வேறு மாநிலங்களில் இருந்து 450க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்று அசத்தினர். இதில் வெற்றி பெறுவோர், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் செப்டம்பரில் நடக்கும் சர்வதேச போட்டியில் பங்கேற்பர்.