/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ தினமலர் செய்தி எதிரொலி! | சிங்காநல்லூர்- ஒண்டிப்புதூர் சாலை ஆக்கிரமிப்பு அகற்றம்
தினமலர் செய்தி எதிரொலி! | சிங்காநல்லூர்- ஒண்டிப்புதூர் சாலை ஆக்கிரமிப்பு அகற்றம்
கோவையில் அதிக போக்குவரத்து உள்ள சாலைகளில் ஒன்று திருச்சி சாலை. அதிலும் சிங்காநல்லுார் சிக்னல் சந்திப்பில் காலை, மாலை நேரங்களில் சாலையை கடக்க முடியாத அளவிற்கு வாகனங்கள் அதிக எண்ணிக்கையில் செல்கின்றன. இதற்கு காரணம் அந்த இடத்தில் ஆக்கிரமிப்புகள் அதிகம் இருந்தது தான். இது தினமலர் கள ஆய்வில் தெரியவந்தது. அந்த செய்தியின் எதிரொலியாக தற்போது ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு விட்டன. இதனால் அந்த இடத்தில் போக்குவரத்து நெரிசல் தற்போது குறைந்துள்ளது. இது பற்றி இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.
டிச 02, 2024