மாநகராட்சி பள்ளிகளுக்கு இடையே முதல் முறையாக நடைபெற்ற தடகளம் | sports | covai
கோவை மாநகராட்சி, கோவை தடகள கிளப் மற்றும் வி.ஜி.எம். மருத்துவமனை சார்பில் மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் 12, 14, 17 மற்றும் 19 வயது பிரிவுகளில் மாணவ - மாணவிகளுக்கு ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், தொடர் ஓட்டம், தடை தாண்டும் ஓட்டம், குண்டு எறிதல் உள்ளிட்ட தடகளப் போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் துவக்கி வைத்தார். துணை கமிஷனர் செல்வ சுரபி, துணை மேயர் வெற்றிச்செல்வன், வி.ஜி.எம். மருத்துவமனை டாக்டர் சுமன், மாவட்ட விளையாட்டு அலுவலர் அருணா, கோவை மாவட்ட தடகள சங்க நிர்வாகிகள் உடனிருந்தனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை தேர்வு செய்து சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியில் சிறப்பாக செயல்படும் மாணவர்கள் மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க அனுப்பி வைக்கப்படுவர்.