கோவை மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள், பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்பு | sports | covai
கோவை மாநகராட்சி சார்பில் மாநகராட்சி உயர் அதிகாரிகள், அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. போட்டியை மாநகராட்சி கமிஷனர் சிவகுருபிரபாகரன் மற்றும் துணை மேயர் வெற்றிச்செல்வன் துவக்கி வைத்தனர். ஆண்கள் மற்றும் பெண்களுக்கு 40 வயதுக்கு உட்பட்டோர், 40 வயதுக்கு மேற்பட்டோர் என இரு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. ஆண்களுக்கு கிரிக்கெட், கால்பந்து, வாலிபால், செஸ், இறகுப்பந்து ஆகிய போட்டிகளும், பெண்களுக்கு த்ரோபால், டென்னிகாய்ட், செஸ், கேரம், இறகுப்பந்து உள்ளிட்ட போட்டிகளும் நடத்தப்பட்டன. இப்போட்டியில் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, மத்தியம் மற்றும் மாநகராட்சி பிரதான அலுவலகம் என ஆறு அணிகளை சேர்ந்த 450க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 40 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டிகள் புதன் காலை துவங்கியது. தொடர்ந்து ஜூலை 26 ம் தேதி 40 வயதுக்கு மேற்பட்டோருக்கான போட்டிகள் நடக்கிறது. கால்பந்து முதல் சுற்றுப்போட்டியில் மேற்கு மண்டல அணி 4 - 1 என்ற கோல் கணக்கில் பிரதான அலுவலக அணியை வீழ்த்தியது. தெற்கு மண்டல அணி 4 - 1 என்ற கோல் கணக்கில் கிழக்கு மண்டல அணியை வீழ்த்தியது.