உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு | sports | covai

கோவை பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு | sports | covai

கோவை பள்ளிக் கல்வித் துறை சார்பில் மதுக்கரை குறுமைய அளவிலான விளையாட்டு போட்டிகளை செயின்ட் ஆன்ஸ் பள்ளி ஒருங்கிணைத்து நடத்துகிறது. இதன் ஒரு பகுதியாக மாணவ, மாணவியருக்கு கூடைப்பந்து, கால்பந்து மற்றும் டேபிள் டென்னிஸ் போட்டிகள் நடத்தப்பட்டன. மாணவர் கூடைப்பந்து 14 வயது பிரிவு இறுதிப் போட்டியில் மல்லையன் பள்ளி அணி 30 - 6 என்ற புள்ளிக் கணக்கில் மலுமிச்சம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியை வீழ்த்தியது. 17 வயது பிரிவில் மல்லையன் பள்ளி அணி 26 - 14 என்ற புள்ளிக் கணக்கில் எல்ஜி பள்ளியையும்; 19 வயது பிரிவில் எல்ஜி பள்ளி அணி 39 - 0 என்ற புள்ளிக் கணக்கில் வெள்ளலுார் நிர்மலா மாதா பள்ளியையும் வீழ்த்தி முதலிடம் பெற்றது. மாணவியர் கூடைப்பந்து 17 வயது பிரிவில் மல்லையன் பள்ளி அணி 30 - 4 என்ற புள்ளிக் கணக்கில் செயின்ட் ஆன்ஸ் பள்ளியையும், 19 வயது பிரிவில் எல்ஜி பள்ளி அணி 12 - 4 என்ற புள்ளிக் கணக்கில் நிர்மலா மாதா பள்ளியையும் வீழ்த்தி முதலிடம் பெற்றது. மாணவர்கள் கால்பந்து 14 வயது பிரிவில் ஜே.ஜே நகர் அரசு பள்ளி முதலிடம், பி.எம்.ஜி. பள்ளி இரண்டாமிடம், 19 வயது பிரிவில் செயின்ட் ஆன்ஸ் பள்ளி முதலிடம், நிர்மலா மாதா பள்ளி இரண்டாமிடம் பெற்றது. 17 வயதுக்கு உட்பட்ட மாணவர் கால்பந்து முதல் சுற்றுப்போட்டியில் நிர்மலா மாதா பள்ளி அணி 6 - 5 டை பிரேக்கர் கோல் கணக்கில் செயின்ட் ஆன்ஸ் பள்ளியை வீழ்த்தியது.

ஆக 02, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ