300க்கும் மேற்பட்ட இளம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு | sports | covai
300க்கும் மேற்பட்ட இளம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு / sports / covai பள்ளிக் கல்வித் துறை சார்பில் கோவை மாவட்ட அ குறுமைய விளையாட்டு போட்டிகள் இன்றும், நாளையும் நடக்கிறது. தேவாங்கா பள்ளியில் சிலம்பம் போட்டியும், சின்னவேடம்பட்டி டி.கே.எஸ்., பள்ளி, லாரல் பள்ளி, சி.எஸ்.ஐ., பள்ளி ஆகிய மூன்று பள்ளிகளில் செஸ் போட்டியும் நடக்கின்றன. இரு நாட்கள் நடக்கும் போட்டியில், 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றுள்ளனர். தேவாங்கா பள்ளியில் 17 வயதுக்கு உட்பட்ட, 30 கிலோ எடைக்கும் குறைவான மாணவியருக்கான சிலம்பம் போட்டி நடந்தது. இதில், மாரண்ண கவுடர் பள்ளி மாணவி மது வர்ஷினி, பிரசன்டேஷன் கான்வென்ட் பள்ளி மாணவி பிரகதீஷ்வரி ஆகியோர் முதல் இரு இடங்களையும், 35 கிலோவுக்கு குறைவான போட்டியில் பிரசன்டேஷன் பள்ளி மாணவி மதுஸ்ரீ, ஒக்கிலியர் காலனி மாநகராட்சி பள்ளி மாணவி தனலட்சுமி, ஆர்.எஸ்., புரம் மாதிரி பள்ளி மாணவி நிஷிகா ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர். அதேபோல், 40 கிலோவுக்கு குறைவான பிரிவில், ஒப்பணகார வீதி மாநகராட்சி பள்ளி மாணவி ஜெயலட்சுமி, ஆர்.எஸ்., புரம், மாதிரி பள்ளி மாணவி தக்சன்யா, பிரசன்டேஷன் பள்ளி மாணவி மேதா ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர். 50 கிலோவுக்கு குறைவான போட்டியில், சி.சி.எம்.ஏ., பள்ளி மாணவி அபிநயா, பிரசன்டேஷன் பள்ளி மாணவி மித்ரா, ஆர்.எஸ்., புரம், மாநகராட்சி மாதிரி பள்ளி மாணவி கீர்த்தனா ஆகியோர் முதல் மூன்று இடங்களை தட்டிச் சென்றனர். தொடர்ந்து போட்டிகள் நடக்கின்றன.