உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / திறமையை வெளிக்காட்டிய வீரர்கள் | Sports | Kovai

திறமையை வெளிக்காட்டிய வீரர்கள் | Sports | Kovai

கோவை மண்டல பாலிடெக்னிக் கல்லுாரிகளுக்கு இடையேயான த்ரோபால் போட்டி பொள்ளாச்சி நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லுாரியில் நடந்தது. இதில் ஏழு கல்லுாரி அணிகள் பங்கேற்றன. ஒவ்வொரு அணி வீரர்களும் தங்களது அணியை வெற்றி பெற வைக்க ஆக்ரோஷமாகவும், விவேகமாகவும் விளையாடிய விதம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. முதல் அரையிறுதி போட்டியில் நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லுாரி அணியும் - பி.ஏ. கல்லுாரி அணியும் மோதின. இதில் நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லுாரி அணி 15 - 13, 15 - 12 என்ற நேர்செட்டில் வெற்றி பெற்றது. அடுத்த அரையிறுதி போட்டியில் கோவை கிருஷ்ணா கல்லுாரி அணியும் - ராமகிருஷ்ணா கல்லுாரி அணியும் மோதின. கோவை கிருஷ்ணா கல்லுாரி அணி 15 - 5 மற்றும் 15 -4 என்ற நேர்செட்டில் வெற்றி பெற்றது.

செப் 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை