உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / 80 பேருக்கு பரிசுகள் வழங்கி ஊக்குவிப்பு | sports | Kovai

80 பேருக்கு பரிசுகள் வழங்கி ஊக்குவிப்பு | sports | Kovai

கோவை எஸ்.எம்.எஸ். கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் மாவட்ட அளவிலான சேரன் கோப்பை-2024 செஸ் போட்டி நடந்தது. இதில் 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர். போட்டியை கல்லுாரி முதல்வர் அருணா துவக்கி வைத்தார். இதில் 10, 12, 14 மற்றும் 18 என நான்கு பிரிவுகளிலும் தலா 10 பரிசுகள் வீரர், வீராங்கனைகள் என இரு பிரிவுகளிலும் வழங்கப்பட்டன. பாரதியார் பல்கலை உடற்கல்வித் துறை பேராசிரியர் குமரேசன் பரிசுகளை வழங்கினார். கல்லுாரியின் ஆங்கிலத் துறை தலைவர் கிரிஷ்டி உட்பட பலர் பங்கேற்றனர்.

அக் 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை