மாணவர்கள் அபார ஆட்டம் | sports | Tripur
திருப்பூர் ஸ்ரீஅலகுமலை வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மாணவர்களுக்கான தெற்கு குறுமைய ஆண்கள் பிரிவு வாலிபால் போட்டி நடைபெற்றது. போட்டியை பள்ளி செயலாளர் அண்ணாத்துரை துவக்கி வைத்தார். பள்ளி முதல்வர் சீனிவாசன் தலைமை வகித்தார். 14, 17 மற்றும் 19 வயது பிரிவினர் பங்கேற்ற போட்டியில் 33 பள்ளிகளில் இருந்து 600 மாணவர்கள் கலந்து கொண்டனர். போட்டியை கண்காணிப்புக்குழு உறுப்பினர் மகேந்திரன் ஒருங்கிணைத்தார். நடுவர்களாக முருகன், சிவலிங்கம், பிரகாஷ், கார்த்திகேயன், ஜம்பு, ரவி, பிரகாஷ் மற்றும் மகேந்திரன் பணியாற்றினர்.
ஆக 22, 2024