KPR இன்ஜினீயரிங் கல்லுாரி மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி உடற்கல்வித்துறை ஏற்பாடு | sports | covai
கோவை கே.பி.ஆர். இன்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியின் உடற்கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளை கல்லுாரி முதல்வர் சரவணன் துவக்கி வைத்தார். இதில் மாணவ, மாணவிகளுக்கு வாலிபால், கூடைப்பந்து, த்ரோபால், கோ கோ, பூப்பந்து, ஹேண்ட்பால், கபடி, கால்பந்து உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகளில் 80 பள்ளிகளை சேர்ந்த 1700 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். மாணவர் பிரிவு கால்பந்து அரையிறுதி போட்டியில் மணி மேல்நிலைப்பள்ளி அணி 1 - 0 என்ற கோல் கணக்கில் தசரதன் பள்ளியையும், ஸ்டேன்ஸ் பள்ளி அணி 2 - 0 என்ற கோல் கணக்கில் எஸ்.எஸ்.வி.எம்., பள்ளி அணியையும் வீழ்த்தியது. மாணவியர் கூடைப்பந்து இறுதிப் போட்டியில் கிருஷ்ணம்மாள் பள்ளி அணி 33 - 31 என்ற புள்ளிக் கணக்கில் சுகுணா பள்ளி அணியை வீழ்த்தியது. மாணவர் பிரிவு அரையிறுதி போட்டியில் சுகுணா பள்ளி அணி 40 - 39 என்ற புள்ளிக் கணக்கில் நேஷனல் மாடல் பள்ளி அணியையும், பெர்க்ஸ் பள்ளி அணி 62 - 42 என்ற புள்ளிக்கணக்கில் ஸ்டேன்ஸ் பள்ளி அணியையும் வீழ்த்தியது.