உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் | temple festival | valparai

திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் | temple festival | valparai

கோவை மாவட்டம் வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் எழுந்தருளியுள்ள காசிவிஸ்வநாதருக்கு மாசி மாதம் பிரதோஷ பூஜை நேற்று மாலை நடைபெற்றது. இதையொட்டி சுவாமிக்கு பால், இளநீர் மஞ்சள், பன்னீர், திருநீறு உள்ளிட்ட 16 வகையான அபிஷேக, அலங்கார பூஜைகள் மற்றும் மகா தீபாராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து சிவபெருமான் தேவியருடன் எழுந்தருளி கோயிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சிவபெருமானை வழிபட்டனர்.

பிப் 26, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை