/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ சுவாமிக்கு 16 வகையான அபிஷேக, அலங்கார பூஜை | temple festival | valparai
சுவாமிக்கு 16 வகையான அபிஷேக, அலங்கார பூஜை | temple festival | valparai
கோவை மாவட்டம் வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் எழுந்தருளியுள்ள காசிவிஸ்வநாதருக்கு கார்த்திகையையொட்டி 308 சங்காபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. தொடர்ந்து இன்று மாலை 5 மணிக்கு பால், இளநீர் மஞ்சள், பன்னீர், திருநீறு உள்ளிட்ட 16 வகையான அபிஷேக, அலங்காரம், மாலை 6 மணிக்கு சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றன. பக்தர்கள் புனித நீரை கையில் ஏந்தி கோயிலை மூன்று முறை வலம் வந்து காசிவிஸ்வநாதருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். சங்காபிஷேக பூஜையில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சிவபெருமானை வழிபட்டனர்.
டிச 09, 2024