உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது அவசியம் | Vaccination is required for livestock | Udumalai

கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது அவசியம் | Vaccination is required for livestock | Udumalai

கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது அவசியம் தினால் | Vaccination is required for livestock / Udumalai / Tripur திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூட வளாகத்தில் வேளாண் துறை சார்பில் வேளாண் கருத்தரங்கம் நடந்தது. வட்டார வேளாண் உதவி இயக்குனர் தேவி வரவேற்றார். கால்நடை மருத்துவர் ராஜசெல்லப்பன் பேசியதாவது: இப்பகுதியில் வளர்க்கப்படும் கால்நடைகளில் கோமாரி, அம்மை மற்றும் உண்ணிக்காய்ச்சல் அதிக பாதிப்புகளை ஏற்படுத்து கின்றன. இதில், கோமாரி மற்றும் அம்மை நோயை தடுக்க அரசால் இலவச மாக தடுப்பூசி போடப்படுகிறது. கிராமந்தோறும் நடத் தப்படும் தடுப்பூசி முகாம்களை, கால்நடை வளர்ப்போர் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இத்தகைய நோய்களால் கடந்தாண்டு இப்பகுதியில் மட்டும் 63 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. எனவே தடுப்பூசி செலுத்துவதுஅவசியமாகும் என்றார். வேளாண் இணை இயக்குனர் சுந்தரவடிவேல், இயற்கை வேளாண்மை முறைகள் குறித்து விளக்க மளித்தார். பொங்கலுார் வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர் துக்கையண், ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் தவப்பிரகாஷ், முன்னாள் வட்டார வேளாண் இயக்குனர் மகாலிங்கம் உள்ளிட்டோர் பேசினர். உடுமலை மற்றும் சுற்றுப் பகுதி விவசாயிகள் பங்கேற்றனர்.

நவ 05, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை