ஒன்றரை லட்சம் வளையலில் அம்மனுக்கு அலங்காரம்...
ஆடிப்பூரத்தையொட்டி அம்மன் கோவில்களில் வளையல் திருவிழா கோலாகலமாக நடப்பது வழக்கம். அதன்படி கோவை ரேஸ்கோர்ஸில் உள்ள சாரதாம்பாள் கோவிலிலும் வளையல் திருவிழா பிரமாண்டமாக நடக்கிறது. அம்மனுக்கு பல வண்ணங்களில் வளையல்கள் வைத்து பூஜை செய்யப்படுகிறது. இதேபோல கோவிலின் பல பகுதிகளிலும் வளையல் அலங்காரம் செய்யப்பட்டிருப்பது காண்போரை வியக்க வைக்கிறது. சாரதாம்பாள் கோவிலுக்கு வரும் பெண் பக்தர்களுக்கு வளையல்களும் வழங்கப்படுகின்றன. வளையல் திருவிழா சிறப்பு அம்சங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.
ஆக 12, 2024