நீண்ட நாள் கனவு... நிறைவேற காத்திருக்கிறோம் ...
மேட்டுப்பாளையம் நகராட்சி சார்பில் பவானி ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து, சாமன்னா நீரேற்று நிலையத்தில் சுத்திகரிப்பு செய்து இங்குள்ள வார்டுகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகின்றன. இந்நிலையில் கழிவு நீர் பவானி ஆற்றில் கலப்பதால், ஆற்றில் இருந்து எடுக்கப்படும் மாசடைந்த குடிநீரை குடிப்பதாக மக்கள் கருதினர். இதையடுத்து மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு, நெல்லித்துறை ஊராட்சிக்கு உட்பட்ட விளாமரத்தூரில் உள்ள, பவானி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்கும் திட்டத்துக்கு, தமிழக அரசு, அனுமதி வழங்கி, 22 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அந்த திட்டத்தை விரைவாக மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்பது தற்போது அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
ஜன 06, 2026