நாம் தமிழர் கட்சி உறுப்பினர் உட்பட இருவரிடம் வெடி பொருட்கள் பறிமுதல்
நாம் தமிழர் கட்சி உறுப்பினர் உட்பட இருவரிடம் வெடி பொருட்கள் பறிமுதல் | Wildlife slaughter | two arrested | Coonoor நீலகிரி மாவட்டம் குன்னூரில் காட்டுப்பன்றி உட்பட வனவிலங்குகள் வேட்டையாடுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட வன அலுவலர் கவுதம் உத்தரவுப்படி, குன்னூர் வனச்சரக அலுவலர் ரவீந்திரநாத் தலைமையில் வனவர் ராஜ்குமார், வனக்காப்பாளர்கள் ராம்குமார், ஞானசேகர், வனக்காவலர் ஏசுராஜ் ஆகியோர் காட்டேரி பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். இதில் காரில் சந்தேகத்திற்கு இடமாக சென்றவர்களை பிடித்து சோதனை செய்ததில் சுருக்கு வைக்க பயன்படுத்தப்படும் கம்பி, 3 நாட்டு வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டன. இவ்வழக்கில் வெலிங்டன் பகுதியை சேர்ந்த நாம் தமிழர் கட்சி உறுப்பினர் ராமகிருஷ்ணன் மற்றும் கிளண்டேலை சேர்ந்த ராஜன் ஆகியோரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். வனத்துறையினர் கூறுகையில், நான்சச் ஒட்டர் லைன்பகுதியில் உள்ள வீட்டில் நாட்டு வெடிகுண்டு தயாரித்து வன விலங்குகளை ராமகிருஷ்ணன் வேட்டையாடி வந்துள்ளார். பேரக்ஸ் ராணுவ பகுதிகளில் காட்டுப்பன்றி உள்ளிட்ட இறைச்சியை விற்பனை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. நாட்டு வெடிகுண்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் பச்சை நூல் சுற்றப்பட்ட அணுகுண்டு பட்டாசு, வெங்கச்சாங்கல், கத்தி, தார்பாய்கள், எடை இயந்திரம் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டன என்றனர்.