/ மாவட்ட செய்திகள்
/ கடலூர்
/ விவசாயிகள் துன்பத்தை போக்க கோரிக்கை farmers suffer due to non-procurement of harvesting paddy
விவசாயிகள் துன்பத்தை போக்க கோரிக்கை farmers suffer due to non-procurement of harvesting paddy
சிதம்பரம் அருகே உள்ளது பெரியப்பட்டு கிராமம். இப்பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல் அறுவடை முடிந்துள்ளது. அறுவடை செய்யப்பட்ட நெல்லை வெட்ட வெளியில் விவசாயிகள் குவித்து வைத்துள்ளனர். இதுவரை அதிகாரிகள் நெல்லை கொள்முதல் செய்யவில்லை. இதனால் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தேங்கி கிடக்கிறது. அவ்வப்போது பெய்யும் மழையால் நெல் மூட்டைகள் சேதம் அடைந்து வருகிறது. விவசாயிகள் தார்ப்பாயை வாடகை எடுத்து நெல் மூட்டைகளை பாதுகாத்து வருகின்றனர். விவசாயிகளின் துன்பத்தைப் போக்க கலெக்டர் மற்றும் வேளாண் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.
செப் 20, 2024