ஏரியில் இறங்கி விவசாயிகள் போராட்டம் | Veeranam Lake | No Water Release | Farmers Protest | Cadalore
ஏரியில் இறங்கி விவசாயிகள் போராட்டம் | Veeranam Lake | No Water Release | Farmers Protest | Cadalore கடலூர் மாவட்டம் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் வீராணம் ஏரி பாசனத்தை நம்பியுள்ளனர். சம்பா பருவத்தையொட்டி 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் நேரடி நெல் விதைப்பு செய்தனர். மழை பெய்யாததால் வீராணம் ஏரியில் நீர் திறக்க வலியுறுத்தினர். தண்ணீர் திறக்க அரசு மறுத்து விட்டது. தற்போது வீராணம் ஏரிக்கு வினாடிக்கு 300 கன அடி நீர் வரத்து உள்ளது. அதிலிருந்து சென்னை குடிநீர் தேவைக்கு வினாடிக்கு 73 கன அடி நீர் திறக்கப்படுகிறது. உணவு தேவையை கருத்தில் கொண்டு வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்க விவசாயிகள் வலியுறுத்தினர். எனினும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. தண்ணீர் திறக்க வலியுறுத்தி வீராணம் ஏரியில் இறங்கி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். breath: விவசாயிகள் கூறுகையில், பாசனத்துக்கு தண்ணீர் கிடைக்காததால் பம்புசெட் மூலம் தண்ணீர் பாய்ச்சி வருகிறோம். இதனால் கூடுதல் செலவு ஏற்படுகிறது. பல இடங்களில் போதுமான தண்ணீர் கிடைக்கவில்லை. சம்பா சாகுபடிக்காக ஏக்கருக்கு 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்துள்ளோம். தற்போது தண்ணீர் பற்றாக்குறையால் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. கடன் வாங்கி சாகுபடி செய்த விவசாயிகள் பெரும் வேதனையில் உள்ளனர். பயிர்கள் முழுமையாக கருகிவிட்டால் விவசாயிகளின் வாழ்வாதாரமே பாதிக்கப்படும். எனவே வீராணம் ஏரி நீரை உடனே திறக்க வேண்டும், என்றனர். பாசனத்துக்கு தேவையான தண்ணீரை உடனடியாக திறக்க வேண்டும். இல்லையெனில் வறட்சியால் பாதிக்கப்பட்டதாக கருதி, ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவுவதால் சேத்தியாத்தோப்பு டிஎஸ்பி ராமலிங்கம், இன்ஸ்பெக்டர் பாபு தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். விவசாயிகளிடம் சப் கலெக்டர் சுப தர்ஷினி, பொதுப்பணித் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். கருகிய வயல்களின் புகைப் படங்களை காண்பித்து விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தினர். இரண்டு நாட்களுக்குள் தண்ணீர் திறக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.