அடிப்படை வசதிகள் இன்றி தினமும் வேதனை | power cut for 4 days | sathyamangalam
அடிப்படை வசதிகள் இன்றி தினமும் வேதனை / power cut for 4 days / sathyamangalam ஈரோடு மாவட்டம் சத்தியமங்களம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட தாளவாடி மலை பகுதியில் கேர்மாளம், காடட்டி, சுசில்கரை, திங்களூர் உள்ளிட்ட 50 மலை கிராமங்கள் உள்ளன. கேர்மாளம் மலை கிராமத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். சுகாதார வளாகம், மருத்துவம், போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இங்கில்லை. கர்ப்பிணிகள் மற்றும் நோயாளிகளின் அவசர தேவைக்குக் கூட ஆம்புலன்ஸை அழைக்க முடியாது. மலை கிராமங்களில் செல்போன் டவர் இல்லாததால், இணையதள வசதி கிடையாது. கர்நாடக எல்லையில் இணையதள வசதி இருக்கும் பகுதியை தேடிச் செல்லும் அவலம் உள்ளது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். Breath தென்மேற்கு பருவக்காற்று தீவிரமடைந்த நிலையில் கடந்த மே 25ம் தேதி கேர்மாளம் மலை கிராமத்தில் சூறைக்காற்றுடன் கன மழை பெய்தது. சூறைக்காற்றில் பல மின்கம்பங்கள் சாய்ந்தன. ஆங்காங்கே மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு மலை கிராமங்கள் தனி தீவானது. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதித்தது. Breath தாளவாடி மலைப்பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட மலை கிராமங்களுக்கு சத்தியமங்கலம் ராஜன் நகர் பகுதியில் இருந்து திம்பம் மலைப்பாதை வழியாக மின்சாரம் வழங்கப்படுகிறது. சூறைக்காற்றில் மின் கம்பங்கள் முறிந்து மின் கம்பிகள் அறுந்ததால், கடந்த நான்கு நாட்களாக அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மோட்டார் போட முடியாததால், குடிநீர் விநியோகம் தடைப்பட்டது. செல்ஃபோன் சார்ஜ் போட முடியாததால், அவசர உதவிக்கு கூட யாரையும் தொடர்பு கொள்ள முடியாமல் மக்கள் பரிதவிக்கின்றனர். செல்போன் சார்ஜ் போடுவதற்கு 15 கிலோ மீட்டர் தூரம், கர்நாடகா எல்லை பகுதிக்கு நடந்து செல்லும் அவலம் தொடர்கிறது. மலை கிராமங்களில் இரவு நேரம் வனவிலங்கு நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. Byt சமூக ஆர்வலர் கேர்மாளம் 00:02-00:32 Breath தாளவாடி மலை கிராமங்களில் அடிக்கடி மின்கம்பங்கள் அறுந்து விழுவதால், பல நாட்கள் மின்சாரம் துண்டிக்கப்படுவது வழக்கமாகி விட்டது. இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வாக கேர்மாளம் மலைப்பகுதியில் ஒரு புதிய துணை மின் நிலையம் அமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். Byt சரவண குமார் கேர்மாளம் 00:05-00:52 Breath கேர்மாளம் பகுதியில் கர்நாடகா தமிழ்நாடு செக்போஸ்ட் உள்ளது. தொடர் மின்வெட்டால் சட்டவிரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர். நேற்று மாலை 5 மணி அளவில் மின்சாரம் திரும்பியது. ஆனால் வெறும் 20 நிமிடங்களில் மீண்டும் கிராமங்கள் இருளில் மூழ்கியது. அரசு உடனடியாக முறையான நடவடிக்கை எடுத்து, தாளவாடி மலை கிராம மக்களுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.