ஹவாலா பணமா என வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை | Dindigul | Train raid | ₹ 13.77 lakh seized
ஹவாலா பணமா என வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை / Dindigul / Train raid / ₹ 13.77 lakh seized சென்னை டு கன்னியாகுமரி செல்லும் திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரயிலில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக திண்டுக்கல் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தத. திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனுக்கு ரயில் வந்ததும் அன் ரிசர்வ் கோச்சில் பயணித்த பயணிகளின் உடைமைகளை போலீசார் சோதனை செய்தனர். பயணி ஒருவரின் பையை சோதனை செய்தனர். அதில் கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுக்கள் இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவரிடம் விசாரிக்கையில் கன்னியாகுமரியை சேர்ந்த நவநீதகிருஷ்ணன் வயது 44 என தெரியவந்தது. அவர் தன்னை கார் புரோக்கர் எனவும், கார் வாங்குவதற்காக பணத்தை எடுத்து செல்வதாகக் கூறினார். அவரை ஸ்டேஷன் அழைத்து வந்த போலீசார் முறைப்படி விசாரித்தனர். அப்போது அவர் வெளிநாட்டு கரன்சிகளை சென்னையில் 13 லட்சத்து 76 ஆயிரம் ரூபாயாக மாற்றிக் கொண்டு ரயிலில் கன்னியாகுமரி செல்வதாக கூறினார். அதைத் தொடர்ந்து நவநீதகிருஷ்ணன் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட 13 லட்சத்து 76 ஆயிரம் ரூபாயை மதுரை வருமான வரி அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர். நவநீதகிருஷ்ணன் ரயிலில் கடத்தியது ஹாவாலா பணமா என வருமான வரி அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.