உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திண்டுக்கல் / ப்ளஸ் 2 படித்து விட்டு கிளினிக் நடத்திய போலி டாக்டர் | Fake Doctor Arrest |Dindigul

ப்ளஸ் 2 படித்து விட்டு கிளினிக் நடத்திய போலி டாக்டர் | Fake Doctor Arrest |Dindigul

திண்டுக்கல் மாவட்டம் வட மதுரையை சேர்ந்தவர் காளிதாஸ் வயது 58. ப்ளஸ் 2 படித்தவர். போலி ஆவணங்களை வைத்து எம்.பி.பி.எஸ். படித்ததாக கூறி வந்தார். வட மதுரை மெயின் ரோட்டில் கிளினிக் துவக்கினார். கிளினிக் முன்பு காளிதாஸ் எம்.பி.பி.எஸ். என நேம் போர்டு வைத்து தொழிலில் பிசியானார். பல ஆண்டுகளாக ஆங்கில மருத்துவ முறையில் ஏராளமான நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தார். அவரை அப்பகுதி மக்கள் கைராசியான டாக்டர் என அழைத்து வந்தனர். இதற்கிடையே காளிதாஸ் போலி டாக்டர் என திண்டுக்கல் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குனர் பூமிநாதனுக்கு தகுந்த ஆதாரங்களுடன் புகார் சென்றது. அவரது தலைமையில் மருத்துவ குழுவினர் காளிதாஸ் நடத்தி வந்த கிளினிக்கில் அதிரடி ரெய்டு நடத்தினர். அவரது கல்வி சான்றுகளை ஆய்வு செய்கையில் குட்டு அம்பலமானது. அவர் ப்ளஸ் 2 மட்டுமே படித்து விட்டு எம்.பி.பி.எஸ். படித்தது போல் போலி ஆவணம் தயாரித்து கிளினிக் நடத்தி வந்தது வெட்ட வெளிச்சத்துக்கு வந்தது. அவர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரை கைது செய்த வடமதுரை போலீசார் கிளனிக்கிற்கு சீல் வைத்தனர். கைராசியான டாக்டர் என பெயரெடுத்த போலி டாக்டர் காளிதாஸ் கைதான சம்பவம் வடமதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மே 08, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ