தமிழகம் முழுவதும் தொடரும் ரவுடிகளின் அராஜகத்தால் பொதுமக்கள் அதிர்ச்சி
தமிழகம் முழுவதும் தொடரும் ரவுடிகளின் அராஜகத்தால் பொதுமக்கள் அதிர்ச்சி / Dindigul / Gang hacks BJP executive to death திண்டுக்கல் மாவட்டம், ராஜக்காபட்டி அடுத்த கல்லுப்பட்டியை சேர்ந்த விவசாயி பாலகிருஷ்ணன், வயது 39. திருமணமாகவில்லை. 4 வருடங்களுக்கு முன் சாணார்பட்டி முன்னாள் வடக்கு ஒன்றிய செயலராக இருந்தார். பாஜ உறுப்பினராக உள்ளார். நேற்று மாலை 6 மணியளவில் ராஜக்காபட்டி மடூர் பிரிவில் முத்தாலம்மன் பூஞ்சோலை கோயில் என்ற இடத்தில் நண்பர்களுடன் பாலகிருஷ்ணன் பேசிக்கொண்டிருந்தார். அங்கு டூவீலரில் வந்த மர்மகும்பல் அவரை அறிவாளால் சரமாரியாக வெட்டி சாய்த்துவிட்டு அங்கிருந்து தப்பியது. பாலகிருஷ்ணன் ஸ்பாட்டிலேயே இறந்தார். சாணார்பட்டி போலீஸார் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் சம்பவம் நடந்திருக்கலாம் என தெரிய வந்துள்ளது. ஸ்பாட்டிற்கு வந்த எஸ்பி பிரதீப் மற்றும் ஏடிஎஸ்பி சிபி சாய் சௌந்தர்யன் விசாரணை நடத்தினர். தப்பி ஓடிய குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.