உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திண்டுக்கல் / ‛மாமூல்' அதிகாரிகள் அமோக ஆதரவு |borewell, jcb ban in kodaikanal? |will the government take action?

‛மாமூல்' அதிகாரிகள் அமோக ஆதரவு |borewell, jcb ban in kodaikanal? |will the government take action?

‛மாமூல் அதிகாரிகள் அமோக ஆதரவு / borewell, jcb ban in kodaikanal? / will the government take action? கொடைக்கானலில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கையாக போர்வெல் அமைக்க, ஜெசிபி இயந்திரம் கொண்டு மண் மேடுகள் மற்றும் பாறைகளை அகற்ற தடை உள்ளது. மீறுவோர் மீது சிறிய தொகை அபராதமாக விதிக்கப்பட்டு வருகிறது. அபராதம் செலுத்திய கையோடு மரங்களை அழித்து போர்வெல் போடுவது, பங்களாக்கள் கட்ட பாறைகளை வெடிவைத்து தகர்ப்பது, பாறைகள் மற்றும் மண்மேடுகளை ஜெசிபி இயந்திரம் மூலம் அகற்றுவது ஜோராக நடக்கிறது. இதனால் கொடைக்கானல் மலை சிறிது சிறிதாக அழிக்கப்பட்டு மொட்டை மலையாக காட்சியளித்து வருகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி ஏராளமான பொது நலன் வழக்குகள் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்யப்படும் வண்ணம் உள்ளது. அரசு அதிகாரிகள் செய்ய வேண்டிய பணிகளை ஐகோர்ட் தலையிட்டு அதிகாரிகளை செய்ய வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் சிலர் தங்களின் கடமையை செய்ய தவறுவதால் பொதுநலன் வழக்குகளால் ஐகோர்ட்டிற்கு மேலும் பணிச்சுமை ஏற்படுத்தி வருகிறது. breath: கொடைக்கானலில் குவியும் ஆயிரக்கணக்கான வாகனங்களைக் கட்டுப்படுத்தும் வகையில் இ பாஸ் நடைமுறை அமல்படுத்தப்பட்டது. இதனால் கொடைக்கானலில் ஓரளவு வாகன நெரிசல் கட்டுப்படுத்தப்பட்டு வருவது வரவேற்க்கத்தக்கது. அடுத்தகட்டமாக கொடைக்கானலில் தடை மீறி கம்பீரமாக வலம் வரும் போர்வெல் மற்றும் ஜெசிபி வாகனங்களுக்கு நகராட்சி நிர்வாகம் மீண்டும் தடை விதித்து உத்தரவிட்டது. இதையடுத்து இன்று முதல் வரும் 30ம் தேதிக்குள் போர்வெல், ஜெசிபி, ஹிட்டாச்சி உள்ளிட்ட கனரக வாகனங்கள் கொடைக்கானலை விட்டு வெளியேற வேண்டும் என ஆர்டிஓ உத்தரவிட்டுள்ளார். மீறுவோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். உடந்தையாக இருக்கும் அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மற்றும் போலீஸ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார். byte: திருநாவுக்கரசு RDO,கொடைக்கானல் 02:39 - 04:26 04:37 - 05:29 கொடைக்கானலில் சுற்றுச்சூழல் பாதிக்கும் பல்வேறு நடவடிக்கைகளை தடை செய்யும் உத்தரவுகள் வெறும் கண்துடைப்பாக இருக்கக்கூடாது. அத்துமீறல்களில் ஊராட்சி தலைவர் முதல் அரசியல் பிரமுகர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு மாமூல் அதிகாரிகள் பலர் அமோக ஆதரவு அளித்து வருவதால் விதிமீறல்கள் நாளொரு மேனி பொழுதொரு வண்ணம் போல் அரங்கேறி வருகிறது. எனவே இனியாவது விதிமீறலில் ஈடுபடுவோர் மீது பாரபட்சமற்ற முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.

ஜூன் 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை