உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திண்டுக்கல் / பெங்களூருஆம்னி பஸ்சில் கடத்திய ஐவர் கைது| Liquor smuggling in tetra pocket | 5 arrested| Dindigul

பெங்களூருஆம்னி பஸ்சில் கடத்திய ஐவர் கைது| Liquor smuggling in tetra pocket | 5 arrested| Dindigul

பெங்களூரு ஆம்னி பஸ்சில் கடத்திய ஐவர் கைது | Liquor smuggling in tetra pocket | 5 arrested | Dindigul பெங்களூருவில் இருந்து மதுரை செல்லும் ஆம்னி பஸ்சில் டெட்ரா பாக்கெட் வடிவில் மது பாக்கெட்டுகளை கடத்தி வருவதாக திண்டுக்கல் மது விலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி, எஸ்.ஐ. முத்துக்குமார் மற்றும் போலீசார் சுரேஷ், மெருண் ஆகியோர் கொடைரோடு டோல்கேட் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். பெங்களூரு பதிவு எண் கொண்ட ஆம்னி பஸ்சில் சோதனையில் ஈடுபட்டனர். பயணிகளிடம் விசாரித்தனர். அதில் மதுரையை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட ஐந்து பேர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். அவர்களிடம் முறைப்படி விசாரிக்கையில் ஆம்னி பஸ்சின் லக்கேஜ் வைக்கும் அறையில் புரூட்டி வடிவில் உள்ள டெட்ரா பாக்கெட்டுகளில் மது கடத்தி வருவதாக ஒப்புக் கொண்டனர். லக்கேஜ் அறையை போலீசார் திறந்தனர். அதில் தலா 48 பாக்கெட்டுகள் கொண்ட 15 பெட்டிகளில் இருந்த 720 மது பாக்கெட்டுகளை கைப்பற்றினர். அவற்றின் மதிப்பு 40 ஆயிரம் ரூபாய். கடத்தலில் ஈடுபட்ட மதுரையை சேர்ந்த கோபாலகிருஷ்ணன், ஹரிஹரசுதன், தங்கபாண்டி, பழனிகுமார் மற்றும் திலிபன் ஆகியோரை கைது செய்தனர்.

ஜூன் 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை