/ மாவட்ட செய்திகள்
/ திண்டுக்கல்
/ லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி | Dindigul | Tahsildar, broker arrested
லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி | Dindigul | Tahsildar, broker arrested
திண்டுக்கல் ஆர்.எம் காலனியை சேர்ந்தவர் கணேஷ் குமார். தனது வீட்டிற்கு பட்டா கேட்டு மேற்கு தாலுகா அலுவலக சர்வேயர் பாக்யராஜை அணுகினார். அவர் புரோக்கர் சதீஷ் மூலம் 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டார். இறுதியாக 15,000 ரூபாய் பேரம் பேசி முடிவு செய்தனர். லஞ்சம் கொடுக்க விரும்பாத கணேஷ் குமார் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி நாகராஜிடம் புகார் கூறினார். போலீசார் கொடுத்து அனுப்பிய ரசாயனம் தடவிய 15 ஆயிரம் ரூபாயை பாக்கியராஜிடம் கணேஷ்குமார் கொடுத்த போது மறைந்திருந்த போலீசார் பாக்யராஜ் மற்றும் புரோக்கர் சதீஷை கைது செய்தனர்.
ஜூலை 02, 2024