உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திண்டுக்கல் / 140 செ.மீ. நீளம் கொண்ட தந்தம் பறிமுதல் | Trying to sell Ivory | 3 arrest | Kodaikanal

140 செ.மீ. நீளம் கொண்ட தந்தம் பறிமுதல் | Trying to sell Ivory | 3 arrest | Kodaikanal

கொடைக்கானல் மன்னவனூர் அருகே கீழான வயல் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவர் தன்னிடம் யானை தந்தம் இருப்பதாக திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியை சேர்ந்த புரோக்கர்கள் முருகேசன் மற்றும் பொன்வண்ணன் ஆகியோரிடம் கூறினார். மூவரும் சேர்ந்து கேரளாவில் தந்தத்தை விற்பனை செய்ய வாட்ஸ்அப் மூலம் போட்டோக்களை சிலருக்கு அனுப்பினர். இதையறிந்த கொடைக்கானல் வன உயிரின குற்றங்கள் கட்டுப்பாட்டு பிரிவை சேர்ந்த அதிகாரிகள் மூவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 140 சென்டி மீட்டர் நீளம் கொண்ட யானை தந்தம் பறிமுதல் செய்தனர்.

ஆக 11, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி