/ மாவட்ட செய்திகள்
/ கள்ளக்குறிச்சி
/ கல்வராயன் மலையில் ட்ரோன் மூலம் சோதனை | liquor raid at kalvarayan hills
கல்வராயன் மலையில் ட்ரோன் மூலம் சோதனை | liquor raid at kalvarayan hills
தமிழகத்தில் அண்மையில் கள்ளக்குறிச்சியில் நடந்த விஷச்சாராய சாவை அடுத்து தமிழகம் முழுதும் போலீசார் சாராய சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சாராய சாவுக்கு காரணமான கல்வராயன் மலையில் ஏடிஜிபி டேவிட் தேவாசீர்வாதம், ஐஜி அஸ்ட்ரா கார்க் மற்றும் கள்ளக்குறிச்சி எஸ்பி தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். மலைப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் அடர்ந்த வனப் பகுதிகளில் ட்ரோன் கேமராக்களை பரக்க விட்டு தீவிர சோதனை மேற்கொண்டனர். சோதனையில் சாராயம் எதுவும் கிடைக்கவில்லை என போலீசார் தெரிவித்தனர். கல்வராயன் மலைப்பகுதியில் தொடர்ந்து சாராய சோதனையை நடத்த வேண்டும் என போலீஸா ருக்கு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
ஜூலை 22, 2024