உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கள்ளக்குறிச்சி / போட்டியாளர்களை உற்சாகப்படுத்திய மாணவ மாணவியர்

போட்டியாளர்களை உற்சாகப்படுத்திய மாணவ மாணவியர்

போட்டியாளர்களை உற்சாகப்படுத்திய மாணவ மாணவியர் | Dinamalar pattam mega quiz competition|kallakurichi Mount park school தினமலர் பட்டம் இதழ் சார்பில் பதில் சொல் பரிசு வெல் என்ற தலைப்பில் வினாடி வினா போட்டி ஆண்டு தோறும் பல்வேறு ஊர்களில் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதுச்சேரி தியாகதுருகம் மவுண்ட் பார்க் மேல்நிலைப் பள்ளியில் வினாடி வினா போட்டி நடைபெற்றது. போட்டியில் 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இவர்களுக்கு பொது அறிவு உட்பட்ட 20 வினாக்கள் கேட்கப்பட்டு தேர்வு நடந்தது. மாணவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் 16 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் 8 அணிகளாக பிரிக்கப்பட்டு போட்டியில் பங்கேற்றனர். நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக தினமலர் நாளிதழ் புதுச்சேரி பதிப்பு வெளியீட்டாளர் கே. வெங்கட்ராமன், கள்ளக்குறிச்சி கலெக்டர் பிரசாந்த், ஆச்சார்யா கல்வி நிறுவனங்களின் தலைவர் அரவிந்தன், மவுண்ட் பார்க் குழுமத் தாளாளர் மணிமாறன், பள்ளி முதல்வர் கலைச்செல்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர். போட்டியில் பங்கேற்ற மாணவ மாணவியர் கேள்விகளுக்கு அசத்தலாக பதில் அளித்தனர். மூன்று சுற்றின் முடிவில் விஷாலினி பிறைமதி ஆகியோரின் டி அணி முதலிடம் பெற்றது. இதில் நாராயணமூர்த்தி புகழ் ஞானவேந்தர் ஆகியோரின் அணி இரண்டாமிடம் பெற்றது. இதையடுத்து இரு அணிகளும் மாநில அளவில் நடக்கும் போட்டிக்கு தேர்வானது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தினமலர் வெளியீட்டாளர் கே. வெங்கட்ராமன் பரிசு வழங்கினார். பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. போட்டியில் பங்கேற்ற அணியினர் பதில் கூறாத கேள்விகள் பார்வையாளர்களிடம் கேட்கப்பட்டது. அவர்கள் உடனே பதில் சொல்லி அசத்தினர்.

செப் 10, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை