உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சியில் கஞ்சா விற்ற தென்காசி வாலிபர் உட்பட 5 பேர் கைது | kanchipuram | crime news

காஞ்சியில் கஞ்சா விற்ற தென்காசி வாலிபர் உட்பட 5 பேர் கைது | kanchipuram | crime news

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கிளாய் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. மாறுவேடத்தில் போலீசார் கண்காணித்தனர். அப்போது ஒரு முந்திரி தோப்பில் சந்தேக நபர்கள் இருப்பதாக தகவல் வந்தது. அந்த கும்பலை போலீசார் சுற்றி வளைத்தனர். அவர்களிடம் இருந்து ஒன்றரை கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. பிடிபட்டவர்கள் கிளாய் கிராமத்தை சேர்ந்த செல்வகுமார், ஸ்ரீபெரும்புதூர் சண்முக பிரியன், ராமச்சந்திரன், திருவள்ளூர் கார்த்திகேயன், விக்னேஷ் என்பது தெரிந்தது. அனைவரும் 20 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள்.

ஜன 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை