உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / காஞ்சிபுரம் / வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தில் ஊற்றப்பட்ட புனித நீர்

வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தில் ஊற்றப்பட்ட புனித நீர்

வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தில் ஊற்றப்பட்ட புனித நீர் | Kanchipuram | Karunakara Perumal Temple Kumbabhishekam காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அடுத்த கோவூர் கருணாகர பெருமாள் கோயில் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று முடிந்தன. கடந்த வாரம் வெள்ளிக்கிழமை கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது. காலை யாக சாலை பூஜைகள் முடிவடைந்து கடம் புறப்பாடானது. சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க கோயில் கலசத்தின் மீது புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. குறு, சிறு தொழில் நிறுவன அமைச்சர் தா.மோ. அன்பரசன், கலெக்டர் கலைச்செல்வி மோகன் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள், கோயில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

ஜன 19, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை