உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கன்னியாகுமரி / நள்ளிரவு நடைபெற்ற ஒடுக்கு பூஜையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

நள்ளிரவு நடைபெற்ற ஒடுக்கு பூஜையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

நள்ளிரவு நடைபெற்ற ஒடுக்கு பூஜையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு / Kanniyakumari / Mandaikadu Bhagavathy Amman Temple / midnight Odukku Puja கன்னியாகுமரி மாவட்டம் பெண்களின் சபரிமலை என அழைக்கப்படும் மண்டைகாடு பகவதி அம்மன் கோயில் மாசி கொடை விழா கடந்த 2 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 10ம் நாள் திருவிழாவையொட்டி நேற்று நள்ளிரவு ஒடுக்கு பூஜை 12 மணிக்கு தொடங்கியது. இதற்காக அருகே உள்ள சாஸ்தா கோயிலில் இருந்து 21 வகையான உணவு பதார்த்தங்கள் 9 மண்பானைகள் மற்றும் பெட்டிகளில் வைக்கப்பட்டு பூசாரிகளால் கோயிலுக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. 2 குடம் தேன் மற்றும் உணவு பதார்த்தங்கள் வெள்ளை துணியால் போர்த்தப்பட்டு தலையில் சுமந்து வந்த பூசாரிகளின் வாய்ப்பகுதி சிகப்பு துணியால் கட்டடப்பட்டு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. ஒடுக்கு பவனி கோயிலை ஒரு முறை வலம் வந்ததும் உணவு பதார்த்தங்கள் ஒவ்வொன்றாக அம்மன் முன் இறக்கி வைக்கப்பட்டது. தொடர்ந்து குருதி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. நள்ளிரவில் ஒடுக்கு பூஜையும் அலங்கார தீபாராதனையும் நடைபெற்று திருக்கொடி இறக்கப்பட்டது. நள்ளிரவு நடைபெற்ற ஒடுக்கு பூஜையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். விழாவையொட்டி 200 க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டது.

மார் 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !