உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கன்னியாகுமரி / ஊருக்குள் நுழைந்த புலியால் பொதுமக்கள் பீதி | Kanyakumari | tiger attack

ஊருக்குள் நுழைந்த புலியால் பொதுமக்கள் பீதி | Kanyakumari | tiger attack

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் காக்கச்சல் ஸ்ரீதர்மசாஸ்தா கோயில் அருகில் முள்ளம்பன்றியை வேட்டையாட வந்த புலி தோட்ட தொழிலாளி பூதலிங்கத்தை தாக்கியது. தொடர்ந்து டூ வீலரில் சென்ற ஜெயன் என்பவரை தாக்கி விட்டு தோட்ட பள்ளத்தில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தது . புலி தாக்கி படுகாயமடைந்த பூதலிங்கம் மற்றும் ஜெயன் ஆகியோரை மீட்டு குலசேகரம் அரசு ஆஸ்பிடலில் அட்மிட் செய்தனர். மேல் சிகிச்சைக்காக பூதலிங்கம் மார்த்தாண்டம் தனியார் ஆஸ்பிடலில் அட்மிட் செய்யப்பட்டார். குலசேகரம் வனத்துறையினர் புலி உடலை உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர். முள்ளம்பன்றியை வேட்டையாடியபோது புலியின் உடல் முழுவதும் முள் குத்திய காயம் இருந்தது. பொதுமக்கள் வசிக்கும் பகுதிக்கு அருகே புலி வந்ததால் பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.

ஏப் 24, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !