உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கரூர் / உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல் | Karur | Urge to arrest criminals

உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல் | Karur | Urge to arrest criminals

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் கடந்த 2012 ம் ஆண்டு முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா நடந்தது. இதில் மதுரையை சேர்ந்த 10 பேர் கலந்து கொண்டு காரில் மதுரை திரும்பினர். மதுரை அவனியாபுரம் ரோட்டில் சென்றபோது மர்ம ஆசாமிகள் கார் மீது வெடிகுண்டுகளை வீசினர். இதில் காரில் இருந்த 7 பேர் உடல் சிதறி ஸ்பாட்டிலேயே பலியானார்கள். இவ்வழக்கில் மதுரை அனுப்பானடியை சேர்ந்த ராமர் உட்பட சிலர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டனர். இவ்வழக்கு கரூர் கோர்ட்டில் நடக்கிறது. வழக்கில் ஆஜராவதற்காக ராமர் டூவீலரில் கோர்ட் சென்றார். அரவக்குறிச்சி தேரப்பாடி பிரிவு ரோட்டில் மர்ம நபர்கள் ராமரை சுற்றி வளைத்து அரிவாளால் சரிமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். ராமர் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பிடல் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. ராமரை கொலை செய்த குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். உறவினர்களிடம் போலீஸ் எஸ்பி பிரபாகர் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார். ஆஸ்பிடல் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பிப் 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை