மாசி மாத உற்சவம் விமர்சையாக நடைபெற்றது| Kalyana venkatramana temple oonjal utsav| karur
மாசி மாத உற்சவம் விமர்சையாக நடைபெற்றது/ Kalyana venkatramana temple oonjal utsav/ karur தென் திருப்பதி என்று அழைக்கப்படும் கரூர் கல்யாண வெங்கட்ரமணசுவாமி கோயிலில் மாசி திருவிழா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் மற்றும் தெப்ப திருவிழா நிறைவடைந்தது. சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். உற்சவத்தின் சிறப்பு நிகழ்ச்சியான ஊஞ்சல் வைபவம் நடைபெற்றது. உற்சவர் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண ஸ்வாமி சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சலில் சேவை சாத்தினார். பட்டாச்சாரியார்கள் சதநாமாவளி பாராயணம் மற்றும் துளசி அர்ச்சனை செய்தனர். பஞ்ச கற்பூர தீபாராதனை மற்றும் மகா கும்ப தீபாராதனை காட்டப்பட்டது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.